முள்ளிமுனை கிராமத்தில் மின் கசிவால் தீ விபத்து


முள்ளிமுனை கிராமத்தில் மின் கசிவால் தீ விபத்து
x
தினத்தந்தி 14 Feb 2022 11:30 PM IST (Updated: 14 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

முள்ளிமுனை கிராமத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கம்மாள். இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் நேற்று திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் வீட்டில் தீ பற்றியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து திருவா டானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரசின் உதவி தொகை மற்றும் உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Next Story