முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடந்தது. இதில் 63 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடந்தது. இதில் 63 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி
எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ந் தேதி வெளியிடப்பட்டது. 27-ந் தேதி சிறப்பு பிரிவு கலந்தாய்வும், 28-ந் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வும், 30-ந் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் ஆன்லைனில் நடைபெற்றது.
இந்தநிலையில் மருத்துவ படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு நேற்று நடைபெற்றது. முதல்நாளான நேற்று மாணவர்கள் 63 பேர் வகுப்புகளில் பங்கேற்றனர். மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்த்த பிறகு தான் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு வரவேற்பு
முன்னதாக கல்லூரி தேர்வு அறையில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை, 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அப்போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, துணை முதல்வர் லியோ டேவிட் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதே சமயம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும் நடந்தது.
Related Tags :
Next Story