‘ஹெல்மெட்’ கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு


‘ஹெல்மெட்’ கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:47 PM IST (Updated: 14 Feb 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்த‘ஹெல்மெட்’ கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுதேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குளச்சல், 
குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்த‘ஹெல்மெட்’ கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நகை-பணம் கொள்ளை
குளச்சலில் பிரசித்தி பெற்ற காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருவிழா முடிந்தது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர் ஆலயத்தின் ஜன்னல் கம்பியை துண்டித்து உள்ளே புகுந்து மாதா சொரூபத்தில் இருந்த 2 தங்க சங்கிலிகள், 2 உண்டியல்களில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 
‘ஹெல்மெட்’ அணிந்தபடி
அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. 
மேலும், ஒரு மணிக்கு ஆலயத்தில் உள்ளே நுழைந்த கொள்ளையன் அதிகாலை 3.30 மணிக்கு ஆலயத்தை விட்டு வெளியே வருவது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. ஆலயத்திற்குள் இருக்கும்போது கொள்ளையன் யாரிடமோ போனில் பேசியதும் பதிவாகி உள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
2 தனிப்படைகள்
இந்த கொள்ளையில் துப்பு துலக்க குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலயத்தில் 3 இடங்களில் கைரேகைகள் சிக்கியுள்ளன. இந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story