சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்


சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 14 Feb 2022 11:48 PM IST (Updated: 14 Feb 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதில் சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் அறிவுறுத்தினார்.

திருவாரூர்:
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ  மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதில் சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் அறிவுறுத்தினார்.
வகுப்புகள் தொடக்கம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது. புதிதாக மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்கு சேவை 
மருத்துவ படிப்பு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் மக்களை காப்பதில் தனது உயிரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றியது டாக்டர்கள் மட்டும் தான். 
மாணவர்கள் கண்ணியம், கட்டுப்பாடு, கடமை என முன்றையும் உணர்ந்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். அரசு மருத்துவக்கல்லூரியில் ராக்கிங் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. 
குறைகளுக்கு தீர்வு
எந்த குறைகள் இருந்தாலும் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் முதலாமாண்டு மாணவ-மாணவிகளின் அறிமுக நிகழ்ச்சியில் பாட வாரிய பேராசிரியர்கள் கல்வி முறை குறித்து எளிமையான முறையில் விளக்கம் அளித்தனர். இதில் துணை முதல்வர் ராஜேந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, தலைமை வார்டன் சிவக்குமார், துணை வார்டன் பிரீத்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story