தொழிலாளர்கள் தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மண்டபாண்ட தொழிலாளர்கள் தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய தடையின்றி மண் எடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ஐ.டி.யு. சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகலாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் ஆண்டுக்கு 800 வண்டிகள் மண்பாண்ட தொழிலாளர் மண் எடுக்க உத்தரவு இருந்தும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் மண் எடுக்கச் சென்றால் வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்ற காரணத்தால் மண்பாண்டம், நாட்டு செங்கல், நாட்டு ஓடு ஆகிய தொழில் செய்யாமல் வாழ்வாதாரத்தை இழந்து வேலையின்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய தடையின்றி மண் எடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story