தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 14 Feb 2022 11:58 PM IST (Updated: 14 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
பெரம்பலூர் டவுன் எளம்பலூர் சாலையில் உப்பு ஓடைக்கு அருகே கிரீன் சிட்டி நகர்ப்பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் புதிதாக கட்டப்பட்டு பலர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில், காவிரி குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச்சாக்கடை ஆகிய வசதிகள் ஏதும் நகராட்சி நிர்வாகம் இதுவரை செய்து தரப்படவில்லை. நகராட்சிப் பகுதியில் குடியிருப்பவர்கள் சொத்துவரி ஆண்டுதோறும் தவறாமல் கட்டி வருகின்றனர்.
மேலும் இதர வரிகளையும் செலுத்தி வருகின்றனர். ஆனால் தார்ச்சாலை தவிர எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை
தெரு விளக்குகள் வசதி இல்லாததால் ஆங்காங்கே புதர்களில் இருந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள்  வீடுகளில் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
ராஜா பிரவீன், பெரம்பலூர்

ரவுண்டானா அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு சாலையில் அரசு பள்ளி, ஊராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தீயணைப்பு நிலையம் திரையரங்கம், திருமண மண்டபம், அரசு கலைக்கல்லூரி மருத்துவமனை, அரசு போக்குவரத்து பணிமனை ௭ன அனைத்து துறைகளும் செயல்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே  ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலச்சந்தர், அரியலூர்.


குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முத்துடையான்பட்டியில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலை வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினமும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாதுரை, புதுக்கோட்டை.

கழிவுநீரால் துர்நாற்றம்
கரூர் மாவட்டம்,  வெங்கமேடு புதுகுளத்துப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நி்ற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.
புதுக்கோட்டை மாவட்டம், எரிச்சி சிதம்பர விடுதி தாந்தாணி பஞ்சாயத்து 6-வது வார்டு சிலட்டூர் சாலையில், வாரச்சந்தை அருகே சாலையில் கடந்த ஒருவாரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.

Next Story