தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 15 Feb 2022 12:00 AM IST (Updated: 15 Feb 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு பாத்திமாபுரம் சாலையில் சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சீர் செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், பாத்திமாபுரம், திருச்சி.

அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை 
திருச்சி மாவட்டம், புதூர், உத்தமனூர், இருங்கலூர், பொதக்குடி போன்ற ஊர்களிலிருந்து ஏராளமான பெண்கள் வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள் இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகள் வழியாக திருப்பட்டூர், வாழையூர், பெருவளப்பூர் செல்லும் அரசு பஸ்கள் பெண்களை ஏற்றி செல்வதில் மெத்தனம் காட்டுகின்றனர். மேலும், பஸ் நிறுத்தங்களி்ல் நிற்பது இல்லை. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பொதுமக்கள், திருச்சி.


ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருப்பூர் கிராமம் காட்டபிச்சம்பட்டி மலையாண்டி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மணப்பாறை.

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் தமிழன் நகர் பகுதியில்  சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அங்கு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மின்விளக்கு, குடிநீர், பாதாளச்சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

குரங்குகள் தொல்லை
திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள கும்பகோணம்-கல்லணை சாலையில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த சாலையில்  வசிக்கும் குடியிருப்பு வீடுகளில் உள்ள ஜன்னல் வழியாக குரங்குகள் உள்ளே புகுந்து கடும் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களையும் தூக்கி சென்று விடுகிறது. மேலும் பொதுமக்களையும் சில நேரங்களில் கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சந்திரமோகன், திருவானைக்காவல்.


Next Story