5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மது கடைகளை 4 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவு


5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மது கடைகளை 4 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Feb 2022 12:03 AM IST (Updated: 15 Feb 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மது கடைகளை 4 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அமைந்திருக்கும் 48 அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு வரையிலும், 22-ந் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள 15 அரசு மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள பார் மற்றும் ஓட்டல்களில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். 

அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி செயல்படுவோர் மீது நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story