தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி


தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2022 12:03 AM IST (Updated: 15 Feb 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு போட்டி

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியை தொடங்கியது. இதில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

தேசிய அளவிலான போட்டியில் வினாடிவினா, வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, காணொலி காட்சி உருவாக்குதல் மற்றும் விளம்பரப் பட வடிவமைப்பு என 5 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
15-ந் தேதிக்குள்

 பங்கேற்பாளர்கள், போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https:""ecisveep.nic.in"contest" என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம். போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும்போது போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வினாடி-வினா போட்டியில் பங்கேற்பதற்கு பங்கேற்பாளர்கள் போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்யலாம். போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மூலமாக‌‌ சரிவர ஆவணம் இல்லாததால் ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் எதுவும் திருப்பி வழங்கப்படவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் சேலை, வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story