வக்கணம்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்


வக்கணம்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
x
தினத்தந்தி 15 Feb 2022 12:04 AM IST (Updated: 15 Feb 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

வக்கணம்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாடம் நடத்தினார்.

ஜோலார்பேட்டை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழக முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கடந்த 1-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 222 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அமர்குஷ்வாஹா நேற்று காலை திடீரென வக்கணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ெசன்று 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை தமிழ், ஆங்கிலம் பாடங்களை படிக்க வைத்தார். அதன் பிறகு சிறிது நேரம் மாணவ-மாணவிகளிடம் தமிழ் பாடம் நடத்தினார். 

மேலும் பாடங்களில் உள்ள கேள்விகளை மாணவ-மாணவிகளிடம் ேகட்டபோது, அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் சரியான பதில் கூறினர். அப்போது மாணவ-மாணவிகளை கலெக்டர் பாராட்டினார். 

அப்போது தேர்தல் பார்வையாளர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் பிரதீப்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story