வேலூரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு
வேலூரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
வேலூர்
வேலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பாகவும், பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கவும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் அண்ணா கலையரங்கத்தில் இருந்து தொடங்கி அண்ணாசாலை வழியாக கொணவட்டத்தில் முடிவடைந்தது. ஆண் மற்றும் பெண் போலீசார் கையில் துப்பாக்கியை ஏந்தி மிடுக்குடன் அணிவகுப்பு நடத்தினர். இதனை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story