மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
திருவட்டார்,
மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகள்
கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
நேற்று காலை முதலே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து தொட்டிப்பாலத்தின் வழியாக நடந்து சென்று சுற்றுப்புற இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
மேலும் பரளியாற்றின் இரு கரைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெடிதுயர்ந்து வளர்ந்து பச்சையாக காட்சி தரும் மரங்கள், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.
இதேபோல் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். பின்னர் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story