மின்வாரிய அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


மின்வாரிய அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 12:30 AM IST (Updated: 15 Feb 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி முத்துராமலிங்கத்தேவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. (வயது 57) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே இடம், வீடு குறித்த பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் கருப்பையாவின் எதிர் தரப்பினருக்கு காரைக்குடி மின்வாரியம் மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு கருப்பையா தனது ஆட்சேபனையை பதிவு செய்ததோடு அதற்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.. ஆனாலும் மின் இணைப்பு கொடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு பெற்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அலுவலகம் சென்ற கருப்பையா, போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு கொடுப்பது தவறு எனது தரப்பின் முறையான ஆவணங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மின்வாரிய அலுவலர்களும் போலீசாரும் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, இருதரப்பு ஆவணங்களையும் சட்ட ஆலோசகர்களிடம் கொடுத்து கருத்து கேட்டோம். அவர்கள் கூறிய சட்டக்கருத்துரையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.ஆனாலும் மின் வாரிய உயர் அதிகாரிகள் இது குறித்து மீண்டும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Next Story