திருச்சியில் மனைவியை வெட்டிக்கொன்ற 2-வது கணவர் கைது


திருச்சியில் மனைவியை வெட்டிக்கொன்ற 2-வது கணவர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2022 12:36 AM IST (Updated: 15 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

முதல் கணவர் மகளுக்கு திருமணம் செய்து ைவத்ததால் ஏற்பட்ட தகராறில் திருச்சியில் மனைவியை வெட்டிக்கொன்ற 2-வது கணவர் கைது செய்யப்பட்டார்.

செம்பட்டு,பிப்.15-
முதல் கணவர் மகளுக்கு திருமணம் செய்து ைவத்ததால் ஏற்பட்ட தகராறில் திருச்சியில் மனைவியை வெட்டிக்கொன்ற 2-வது கணவர் கைது செய்யப்பட்டார்.
2-வது திருமணம்
திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் குமரன் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவருக்கு 23 வருடங்களுக்கு முன்பாக மோகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு மகாலட்சுமி என்ற மகளும், மணிவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மோகனிடம் இருந்து செல்வி விவாகரத்து பெற்றார். அதன்பின் செல்வி அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் செல்வம் (50) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
மகளுக்கு திருமணம்
இந்த நிலையில் செல்வியின் முதல் கணவரின் மகள் மகாலட்சுமிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகளின் திருமணத்திற்காக, செல்வி தனது சொந்த ஊரான மானாமதுரையில் உள்ள வீட்டை விற்றுள்ளார். வீட்டை விற்ற பணத்தை வைத்து மகளின் திருமணத்தை செல்வி நடத்தி முடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்வம் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகன் கவியரசுக்கு திருமணம் செய்து வைக்காமல், உனது மகளுக்கு மட்டும் செலவு செய்து திருமணம் செய்து வைத்து விட்டாய் என்று கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
வெட்டிக்கொலை
இது தொடர்பாக நேற்று காலையில் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் இருந்த அரிவாளால் செல்வியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வௌ்ளத்தில் சாய்ந்த செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை  நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் சரண்
மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் செல்வம் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story