வேர் அழுகல் நோயினால் கொத்தமல்லி மகசூல் பாதிப்பு
வேர் அழுகல் நோயினால் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வேர் அழுகல் நோயினால் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வேர் அழுகல் நோய்
வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறை, பூசாரி நாயக்கன்பட்டி, கொட்டமடக்கிபட்டி, அம்மையார்பட்டி, மேல ஒட்டம்பட்டி, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.
3 மாத பயிரான கொத்தமல்லியில் தற்போது ேவர் அழுகல் நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்தும் முன்கூட்டியே அறுவடை செய்தனர்.
மகசூல் பாதிப்பு
இதுகுறித்து குகன்பாறையை சேர்ந்த விவசாயி புஷ்பராஜ் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்தது. இதனால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டோம்.
இதனால் பயிர்களில் வேர் அழுகல் நோய் தாக்கியது. இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சென்ற ஆண்டு ஏக்கருக்கு 9 மூடை கிடைத்தது. இந்த ஆண்டு வேர் அழுகல் நோயால் ஏக்கருக்கு 4 மூடை மட்டுமே கிடைத்துள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் கொத்தமல்லி விலை அதிகரித்துள்ளது. குவிண்டாலுக்கு ரூ.5,300 விலை கிடைக்கிறது. இருப்பினும் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டால் விவசாயிகள் லாபம் அடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story