பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு


பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 15 Feb 2022 1:23 AM IST (Updated: 15 Feb 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

நெல்லை:
பாளையங்கோட்டை செந்தில் நகரைச் சேர்ந்தவர் வீர மணிகண்டன் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மாரிச்செல்வி (30). இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணிகண்டனை 2-வதாக திருமணம் செய்தார். தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக வீரமணிகண்டனையும் பிரிந்து மாரிச்செல்வி தனியாக வசித்து வருகிறார். பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மாரிச்செல்வி ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெட்ரோல் பங்க்குக்கு சென்ற வீர மணிகண்டன், மனைவி மாரிச்செல்வியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாரிச்செல்வியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் விசாரணை நடத்தி, வீர மணிகண்டனை கைது செய்தார்.

Next Story