இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது


இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2022 1:26 AM IST (Updated: 15 Feb 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமல்லி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டை:
சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெல்லையில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்வத்தன்று அந்த பெண் வேலை முடித்து விட்டு பழவூர் பஸ்நிறுத்தம் அருகே வரும்போது, பழவூர் புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் (20), மாசானம் (19), ஜெபக்குமார் (19) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி மணிகண்டன், மாசானம், ஜெபக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

Next Story