அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2022 1:35 AM IST (Updated: 15 Feb 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 ேபரை ேபாலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தாயில்பட்டி, கீழதாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்தநிலையில் கீழதாயில்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த மாதவன் (வயது 27) என்பவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளும், கோட்டையூரில் முனீஸ்வரன் (42) என்பவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story