வாலிபரை வெட்டிய விவசாயிக்கு ஜெயில்


வாலிபரை வெட்டிய விவசாயிக்கு ஜெயில்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:36 AM IST (Updated: 15 Feb 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாலிபரை வெட்டிய விவசாயிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

நெல்லை;
நெல்லை அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 47). இவர் தனது கிணற்றின் அருகே ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ரவீந்திரன் வளர்த்து வந்த ஆடுகள் இறந்துவிட்டது. இதற்கு காரணம் அதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் காரணம் என்று ரவீந்திரன் கருதினார். இதையொட்டி விமல்ராஜை, ரவீந்திரன் அரிவாளால் வெட்டினார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி விஜயலட்சுமி வழக்கை விசாரித்து நேற்று ரவீந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story