70 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு


70 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 2:05 AM IST (Updated: 15 Feb 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே 70 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே, 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வெட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஊத்துமலை அருகே உள்ள ெநாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவீரசின்னு மகன் வீரமல்லையா (வயது 19). இவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு பிரிவில் படித்து வருகிறார். 
இவருடைய பேராசிரியர்கள், மாணவர்களுக்கு வரலாறு குறித்து பாடம் கற்பித்தபோது கல்வெட்டு பற்றிய குறிப்புகளை தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற கல்வெட்டுக்கள் தமிழகத்தில் ஏராளமான பகுதிகளில் காணப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தனது சொந்த ஊரான நொச்சிகுளத்தில் வீரமல்லையா ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது தனது தாத்தா அப்பையா என்பவரது வயல்வெளியில் அமைந்துள்ள வேப்ப மரத்தின் கீழ் கல்வெட்டு போன்ற ஒன்றை வழிபட்டு வந்ததை கண்டார்.

ஆய்வு
இதுகுறித்து தனது கல்லூரி பேராசிரியர்களான லெப்டினட் முனைவர் ராஜகோபால், முனைவர் பிறையா ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள் நொச்சிகுளம் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அது பழங்காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்தது.
அந்த கல்வெட்டில் சுற்றியிருந்த துணியை அகற்றி அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களை ஆய்வு செய்தனர்.

700 ஆண்டுகள் பழமையானது
இதுபற்றி ஆய்வு செய்த கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:-
சுமார் 4 அடி உயரத்தில் கோணிக்கல் வடிவத்தில் அமைந்துள்ள அந்த கல்வெட்டில் 19 வரிகள் உள்ளன. அதில் இடம்பெற்ற எழுத்துகள் தமிழில் உள்ளது. இது 1,268-ம் ஆண்டு முதல் 1,312-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட `தான கல்வெட்டு' ஆகும். கல்வெட்டு 1,294-ம் ஆண்டு செதுக்கப்பட்டு உள்ளது. அந்த கல்வெட்டை யாருக்கு யார் தானம் கொடுத்தார்கள் என்பது பற்றிய முழு விவரம் இல்லை. 
மேலும், இதுபோன்று தமிழகத்தில் இதுவரை 15 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வேறு இடங்களில் இதுபோன்ற கல்வெட்டுக்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டறிந்து அரசுக்கு தெரிவித்து வரலாற்றை மீட்டெடுக்க துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர்கள் கூறினர்.
ஆய்வு ஏற்பாடுகளை ஊத்துமலை தனிப்பிரிவு காவலர் சொரிமுத்து செய்திருந்தார்.

Next Story