தேச, தெய்வ பக்தியோடு இன்றைய இளைஞர்கள் இருக்க வேண்டும்-மதுரை ஆதீனம் பேட்டி
தேச, தெய்வ பக்தியோடு இன்றைய இளைஞர்கள் இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறினார்.
உசிலம்பட்டி
தேச, தெய்வ பக்தியோடு இன்றைய இளைஞர்கள் இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறினார்.
சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் உடனுறை ஐராவதீசுவரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்.கருவறையில் உள்ள ஐராவதீசுவரர் சுவாமி மற்றும் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்த ஆதீனம், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களை ஆசிர்வதித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, கிராமங்கள் தான் பவுன் போன்றது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் உள்ளது. கிராமங்களில் தான் எல்லாம் இருக்கும் என மகாத்மா காந்தி சொன்னார். அதே போன்று பல முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
தேச பக்தியோடும், தெய்வ பக்தியோடும் இன்றைய இளைஞர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடை, தியேட்டர்கள், கட்சி கொடிகள் இல்லாமல் இருக்கும் கிராமம் தான் நல்லா இருக்கும் என்றார்.
மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு மக்களின் மனநிலையை பொறுத்து தேர்தல் முடிவுகள் இருக்கும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story