திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
செந்துறை:
செந்துறை அருகே நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான திரவுபதி அம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. கிராம மக்களால் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து திரவுபதி அம்மன் கோவிலில் அம்மன், விநாயகர், முத்தால்ராவுத்தர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 3 கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா, வாண வேடிக்கை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story