வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்


வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Feb 2022 2:48 AM IST (Updated: 15 Feb 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளிலும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வார்டுகளிலும் வருகிற 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 68 பதவியிடங்களுக்கு மொத்தம் 321 பேர் போட்டியிடுகின்றனர். அரியலூர் நகராட்சியில் 34 வாக்குச்சாவடிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகளிலும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 101 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
ஓட்டுப்பதிவு அன்று 101 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அதன் கட்டுப்பாட்டு எந்திரங்களுடன் பயன்படுத்தப்பட உள்ளது. 19-ந்தேதி ஓட்டுப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அரியலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் நகராட்சி அலுவலகத்திலும், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்தும் வருகிற 22-ந்தேதி எண்ணப்படுகிறது. இதனால் அந்த வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story