கர்நாடக சட்டசபைக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வந்த காங். பெண் எம்.எல்.ஏ.


கர்நாடக சட்டசபைக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வந்த காங். பெண் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 15 Feb 2022 2:51 AM IST (Updated: 15 Feb 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபைக்கு ஹிஜாப் அணிந்து காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பரபரப்பான விவாத பொருளாக மாறியுள்ளது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு மாணவிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கலபுரகியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஷ் பாத்திமா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

 அவர் பேசுகையில், "நான் ஹிஜாப் ஆடையை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வேன். தைரியம் இருந்தால் என்னை யாராவது தடுக்கட்டும்" என்றார். மேலும் கர்நாடக ஐகோர்ட்டு, மாணவர்கள் யாரும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் நேற்று கூடியது. 

இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஷ் பாத்திமா எம்.எல்.ஏ. ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் சபை முடியும் வரை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story