வெள்ளோடு சரணாலயத்தில் 121 வகையான உள்நாடு-வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 121 வகையான உள்நாடு-வெளிநாட்டு பறவைகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சென்னிமலை
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 121 வகையான உள்நாடு-வெளிநாட்டு பறவைகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பறவைகள் சரணாலயம்
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதம் தலைமையில் ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் முன்னிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
121 வகை
இந்த கணக்கெடுப்பில் 121 வகையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகளும், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இன பறவைகளும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈரோடு சேவா அமைப்பை சேர்ந்த சக்திவேல் மற்றும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story