தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை
தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.
தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.
தக்காளி
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்குள்ள கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளார்கள்.
குறிப்பாக 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
குறைந்த விலை
3 மாத பயிரான தக்காளி தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஆனால் இவற்றை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையே விலை கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள்.
இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறும்போது, ‘3 மாத பயிரான தக்காளியை விளைவிக்க ஒரு ஏக்கருக்கு நாற்றுநடுதல், களைஎடுத்தல், உரம், மருந்து என 70 ஆயிரம் செலவு ஆகிறது.
குப்பையில் போட்டார்கள்
கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தார்கள். தற்போது 4 ரூபாய்க்கு கேட்கிறார்கள். அதிக விளைச்சல் உள்ளது அதனால் விலை போகாது என்று காரணம் கூறுகிறார்கள்.
அதனால் எங்கள் பகுதியில் பல விவசாயிகள் தக்காளியை விற்க மனமின்றி செடியிலேயே விட்டுவிட்டார்கள். சிலர் பறித்து குப்பையில் போட்டுள்ளார்கள். இதே நிலை நீடித்தால் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்குத்தான் செல்லவேண்டும்' என்று வேதனை பட்டார்கள்.
Related Tags :
Next Story