சத்தியமங்கலத்தில் மூதாட்டி வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
சத்தியமங்கலத்தில் மூதாட்டி வீட்டில் திருட முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் மூதாட்டி வீட்டில் திருட முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தார்கள்.
மூதாட்டி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மூணு வீடு என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு விசாலாட்சி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், அங்கு பணம், நகை ஏதாவது உள்ளதா? என்று தேடியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த விசாலாட்சி திருடன், திருடன் ஓடிவாருங்கள் என்று அபய குரல் எழுப்பினார்.
தர்ம அடி
விசாலாட்சியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். உஷாரான வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தார்கள். பின்னர் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தார்கள்.
அதன்பிறகு அவரை சத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சுரேஷ் (வயது 26) என்பதும், இவர் தற்போது சத்தியமங்கலத்தை அடுத்த ரங்கசமுத்திரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சுரேஷ் கடந்த 2 நாட்களாக விசாலாட்சியின் வீடு உள்ள பகுதியில் நோட்டமிட்டுள்ளார். அப்போது மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு திருட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை கைது செய்தார்கள்.
Related Tags :
Next Story