வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது
வேளச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அ.தி.மு.க.வினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 2 பேரை தி.மு.க.வினர் மடக்கி பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள், வேளச்சேரியை சேர்ந்த சுகுமார் (வயது 36) மற்றும் வெங்கடேசன் (46) என்பதும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story