கஞ்சா தகராறில் ஆட்டோ டிரைவரை வெட்டி சாய்த்த கும்பல்
திருவல்லிக்கேணியில் கஞ்சா தகராறில் ஆட்டோ டிரைவரை வெட்டி சாய்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை பகுதியைச்சேர்ந்தவர் கார்த்திக். ஆட்டோ டிரைவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இவர், சைவ முத்தையா தெருவில் நடந்து செல்லும்போது, 5 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இவர், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அரிவாளால் வெட்டிய கும்பலைச்சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த கார்த்திக், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கஞ்சா விற்பனை தகராறில் கார்த்திக் அரிவாளால் வெட்டப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ராயப்பேட்டை உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக சைவ முத்தையா தெருவைச்சேர்ந்த ஜெயவேல் மற்றும் ஜொல்லு, சூரியா, மோகன் ஆகியோர் பிடிபட்டனர். கவிதா என்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story