செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் விபரீதம் - மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் விபரீதம் - மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Feb 2022 4:03 PM IST (Updated: 15 Feb 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தந்தை பெரியார் நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் பழனி, உடல் இரண்டு துண்டாகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பழனி தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, மின்சார ரெயில் வருவதாக அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் செல்போனில் பேசியபடியே சென்றதால் அதனை பழனி கவனிக்கவில்லை என தெரிகிறது.

ஆவடி ரெயில்வே போலீசார் பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான பழனிக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story