தெக்கலூரில் கஞ்சி தொட்டி திறப்பு
தெக்கலூரில் கஞ்சி தொட்டி திறப்பு
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் விசைத்தறியாளர்களால் தெக்கலூரில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கூலி உயர்வு கிடைக்காததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்து விசைத்தறியாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவினாசி அருகே தெக்கலூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது.
இது குறித்து விசைத்தறி தொழில் சார்ந்த பாவு பிணைக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது
கஞ்சி தொட்டி திறப்பு
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எங்களுக்கு தொழில் இன்றி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி பாவு பிணைக்கும் தொழில் செய்து அதில் கிடைக்கும் கூலி வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.
தற்போது விசைத்தறி வேலை நிறுத்தம் காரணமாக எங்களுக்கும் வேலையின்றி வருமானம் இல்லாததால் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கஞ்சி தொட்டி திறந்து அனைவரும் ஒரு நேரமாவது கஞ்சி குடித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story