கடப்பாரையால் குத்தி ஓட்டல் ஊழியர் கொலை


கடப்பாரையால் குத்தி ஓட்டல் ஊழியர் கொலை
x
தினத்தந்தி 15 Feb 2022 4:48 PM IST (Updated: 15 Feb 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே கடப்பாரையால் குத்தி ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார்.

குடவாசல்;
குடவாசல் அருகே கடப்பாரையால் குத்தி ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார். 
ஓட்டல் ஊழியர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள எண்கண் பட்டக்கால் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் அருண்குமார்(வயது 24). இவர், கோவையில் உள்ள ஓரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமார் கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். 
நேற்று முன்தினம் இரவு அருண்குமார் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசன் மற்றும் தனது அண்ணன் அய்யப்பன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
கடப்பாரையால் குத்திக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் அருகே இருந்த கடப்பாரையை எடுத்து தனது தம்பி அருண்குமாரை குத்தினார். இதில் வயிற்று பகுதியில் பலத்த காயமடைந்த அருண்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து அருண்குமாரின் சகோதரி சித்ரா, குடவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தகராறில் ஈடுபட்ட ஓட்டல் தொழிலாளியை அவரது அண்ணனே கடப்பாரையால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
---


Next Story