நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகளை மூட வேண்டும்- நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகளை மூட வேண்டும்- நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
x
தினத்தந்தி 15 Feb 2022 5:17 PM IST (Updated: 15 Feb 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. எனவே வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந் தேதி அன்றும் மூடப்பட வேண்டும்.
இந்த நாட்களில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story