முள்ளுக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தின் முன்பு நகைக்கடன் தள்ளுபடி கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


முள்ளுக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தின் முன்பு நகைக்கடன் தள்ளுபடி கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2022 5:22 PM IST (Updated: 15 Feb 2022 5:22 PM IST)
t-max-icont-min-icon

முள்ளுக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தின் முன்பு நகைக்கடன் தள்ளுபடி கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமகிரிப்பேட்டை:
 நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வசிக்கும் மலைவாழ் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். 
மாவட்ட செயலாளர் கந்தசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நகைக்கடன் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யக்கோரியும், ஜப்தி நடவடிக்கையை கைவிடுமாறு கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story