வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


வாக்கு எண்ணும் மையத்தில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 15 Feb 2022 5:29 PM IST (Updated: 15 Feb 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

உடுமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நகராட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற  19ந்தேதி பெற உள்ளது. இதில் உடுமலை நகராட்சியில் மொத்தம் 33  வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தி.மு.க. வேட்பாளர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மீதி உள்ள 32 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 14வது வார்டு பகுதியில் தேர்தல் இல்லாததால் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 63 ஆக உள்ளது.
இந்த 63 வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையம்
இந்த 32 வார்டுகளில் மொத்தம் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு, உடுமலை தளி சாலையில் நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, தனி அறையில் வைக்கப்படும். 
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருந்து கொண்டு வரப்படும் பெட்டி அந்த தனி அறையில் வரிசைப்படி வைப்பதற்கான இடங்கள் கட்டமிடப்பட்டு, வார்டு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி சீல் வைக்கப்படும்.
12 மேஜைகள்
வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பகுதியில் நேற்று தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடத்தில் மொத்தம் 12 ேமஜைகள் போடப்பட உள்ளன.  அந்த இடத்தை சுற்றிலும் வலை அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அந்த வலைப்பகுதிக்கு வெளியில் இருந்து வாக்கு எண்ணிக்கையை பார்க்கும் வகையில் வாக்கு எண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
38 கண்காணிப்பு கேமராக்கள்
இந்த வாக்கு எண்ணிக்கை மையம், அதன் வெளிப்புற பகுதியில் உள்ள இடங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இருக்கும்  பெட்டிகள் வைக்கப்படும் அறை, அதை சுற்றியுள்ள பகுதி ஆகிய இடங்களில் மொத்தம் 38 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story