சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.69 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 552 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த எலக்ட்ரிக் குக்கரில் ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 299 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஷார்ஜாவில் இருந்து வந்த வாலிபர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.13 லட்சத்து 2 ஆயிரம் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் விமான நிலைய சுங்க பகுதியில் 2 இடங்களில் ரூ.21 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 491 கிராம் தங்கமும், ரூ.21 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள 472 கிராம் தங்கமும் கேட்பாரற்று கிடந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் ரூ.69 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 552 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story