ஆன்லைன் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவுகளை அனுப்ப வேண்டுகோள்


ஆன்லைன் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவுகளை அனுப்ப வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Feb 2022 5:50 PM IST (Updated: 15 Feb 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதிக்குள் அனைத்து பதிவுகளையும் அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:
ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதிக்குள் அனைத்து பதிவுகளையும் அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழிப்புணர்வு போட்டி
இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, ‘எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஆன்லைன் மூலம், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கி உள்ளது. இப்போட்டிகளில், அனைத்து வயது பொதுமக்களையும் பங்கேற்க செய்வதன் மூலம், மக்களாட்சியின் முக்கியத்துவத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மக்களாட்சியில், ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பொதுமக்களிடம் இருந்து, ஏராளமான படைப்புகளை வரவேற்கிறோம். தேசிய அளவிலான போட்டிகளில், வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் போஸ்டர் வடிவமைப்பு போட்டி என 5 பிரிவுகள் உள்ளன.
மின்னஞ்சல் முகவரி
போட்டிகளில் பங்கேற்பவர்கள், போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest/ என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். போட்டிகளில் பங்கேற்பவர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை, voter–contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தாங்கள் கலந்துகொள்ள இருக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலில் பொருள் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும். போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும், பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதிக்குள், voter–contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள், அனைத்து வயது பொதுமக்கள், தொழில் முனைவோர் அதிகளவில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story