காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள் - ரூ.1 கோடிக்கு ஏற்றுமதியானது


காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள் - ரூ.1 கோடிக்கு ஏற்றுமதியானது
x
தினத்தந்தி 15 Feb 2022 6:11 PM IST (Updated: 15 Feb 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள் ரூ.1 கோடிக்கு ஏற்றுமதியானது.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த திருமலைவாசன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற காசிமேடு மீனவர்கள், ஆந்திர மாநிலம் அருகே ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பினர். அப்போது அவர்களது வலையில் அரிய வகையான விலை உயர்ந்த மீனான கூரை கத்தாழை மீன்கள் சிக்கி இருப்பது தெரியவந்தது.

மொத்தம் 105 மீன்கள் கிடைத்து இருந்தது. ஒரு மீன் சுமார் 20 கிலோ வரை எடை இருந்தது. ஒரு கிலோ கூரை கத்தாழை மீன் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூரை கத்தாழை மீன் மருந்து, மாத்திரைகள் தயாரிப்புக்கு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை மீன்கள் சென்னையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 2 டன் எடையுள்ள 105 கூரை கத்தாழை மீன்கள், ரூ.1 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

Next Story