ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் - குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை
திருத்தணி வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணி அடுத்த அத்திப்பட்டு கிராமத்திலிருந்து இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டு இருந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரி ஓட்டுனர் முபராக் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த சோதனையின்போது தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story