திருத்தணி முருகன் கோவில் தேரோட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும், ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். முருகன் கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்சோதி மற்றும் உதவி ஆணையர் ரமணி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story