வாக்குச்சாவடிகளில் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 402 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த போலீசார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனித்தனியாக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஊர்க்காவல் படை
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குசாவடி மையங்களில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர் என்று கூறினார். தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தென்பாகம் குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியல் ஜேசுபாதம், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story