ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு


ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 8:36 PM IST (Updated: 15 Feb 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் மொத்தம் 140 லிட்டர் சாராய கேன்கள் மற்றும் 6,240 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும். இந்த மதுபானங்களை அழிப்பதற்காக விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு பூர்ணிமா முன்னிலையில் அந்த மதுபாட்டில்களில் இருந்த மதுபானங்களும் மற்றும் சாராயமும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டுகள் சிவமணி, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story