சாலைஓரத்தில் 13 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி அருகே சாலைஓரத்தில் 13 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான் பட்டி கிராமம் நடுத்தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக தாலுகா வினியோக அதிகாரி நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வினியோக அதிகாரியும், வருவாய் ஆய்வாளர் கடல்குமாரும் முடுக்கு மீண்டான்பட்டி நடுத்தெருவிற்கு சென்றனர்.
அங்கு சாலைஓரத்தில் 13 மூட்டை ரேஷன் அரிசி(523 கிலோ) இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த பகுதியில் பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. பின்னர் தாலுகா வினியோக அதிகாரி 13 மூட்டை ரேஷன் அரிசியை கோவில்பட்டி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story