தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Feb 2022 10:19 PM IST (Updated: 15 Feb 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
குப்பைகள் அள்ளப்படுமா?
குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூர் ஊராட்சி கலிங்கப்பட்டி கடை வீதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் காற்று வீசும் போது கடைவீதி முழுவதும் குப்பைகள் பறக்கின்றன. எனவே குப்பைகளை முறையாக அள்ளி அகற்ற வேண்டும். சண்முகம், கலிங்கப்பட்டி.
விபத்தை ஏற்படுத்தும் மண்
தேனி கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றின் நுழைவுவாயில் முன்பு சாலை ஓரத்தில் மண் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். விபத்தை தடுக்க சாலை ஓரத்தில் கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும். கணேசன், தேனி.
பாலத்தின் சுவர் சேதம் 
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் இருந்து கும்மம்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள குடகனாறு பாலத்தின் சுவர் சேதம் அடைந்து விட்டது. சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க பாலத்தின் சுவரை கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. ஜெரால்டு, வக்கம்பட்டி.
வீணாக செல்லும் குடிநீர் 
தேனி கே.ஆர்.ஆர்.நகர் மேல்நிலை தொட்டியில் இரவில் குடிநீர் நிரப்பப்படுகிறது. ஆனால் குடிநீர் நிரம்புவதை முறையாக கண்காணிப்பது இல்லை. இதனால் தொட்டி நிரம்பி ஒரு மணி நேரத்துக்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காத நிலையில் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும். கதிரவன், தேனி.


Next Story