நகைக்கடை உள்பட 2 கடைகளுக்கு‘சீல்’ வைப்பு
நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட நகைக்கடை உள்பட 2 கடைகள் வாடகை பாக்கியை செலுத்தாததால், அந்த கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வெளிப்பாளையம்:
நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட நகைக்கடை உள்பட 2 கடைகள் வாடகை பாக்கியை செலுத்தாததால், அந்த கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
லட்சக்கணக்கில் வாடகை பாக்கி
நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நாகை நாணயக்கார தெருவில் உள்ளது. அந்த இடத்தில் உள்ள டைலர் கடைக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.35 லட்சத்து 93 ஆயிரத்து 260 வாடகை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள நகை கடைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.22 லட்சத்து 71 ஆயிரத்து 514 வாடகை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பலமுறை நோட்டீசு மூலமும், நேரிலும் தெரிவித்தும் வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
2 கடைகளுக்கு ‘சீல்‘
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் சிறப்பு தாசில்தார் அமுத விஜயரங்கன் மற்றும் அதிகாரிகள் நேற்று வாடகை பாக்கி செலுத்தாத டைலர் கடை மற்றும் நகைக்கடை ஆகியவற்றில் உள்ள பொருட்களை வெளியேற்றி விட்டு, கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவில் நிலத்தில் கடைகள் வைத்துள்ளவர்கள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story