நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2022 10:53 PM IST (Updated: 15 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:-
 இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பற்றி இழிவாக பேசியதாக பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சரபோஜி பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Next Story