கூடுதல் வேளாண்மை இயக்குனர் ஆய்வு
கூடுதல் வேளாண்மை இயக்குனர் ஆய்வு
நன்னிலம்;
நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி அரசு விதைப்பண்ணையில் நடப்பாண்டில் மொத்த சாகுபடி பரப்பில் பாரம்பரிய நெல்ரகங்களான கருப்பு கவுனி 1 ஏக்கர், தூயமல்லி2 ஏக்கர், மற்றும் கிச்சிலி சம்பா 4 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது நெற்கதிர் முற்றும் நிலையில் உள்ளது. இப்பண்ணையில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் (விதை) முருகன் ஆய்வு மேற்கொண்டு பயிரின் வளர்ச்சி நிலையை பார்வையிட்டார். மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களிலிருந்து புறத்தூய்மையான விதைகள் பெறப்பட வேண்டும். பயிர்களின் எண்ணிக்கை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். இதனால் நன்கு விளைச்சல் கிடைக்கும் என கூறினார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) உத்திராபதி, பண்ணை மேலாளர் சந்தோஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர் வனிதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story