19-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 Feb 2022 11:31 PM IST (Updated: 15 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வருகிற 19-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்
டாஸ்மாக் கடைகள் மூடல்
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வருகிற 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து நகர்ப்புற ஊராட்சி தேர்தல் நடைபெறும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.  
இதனையடுத்து கரூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளான குளித்தலை,  புகழூர், பள்ளப்பட்டி, பேரூராட்சிகளான அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம்,  பழைய ஜெயங்கொண்டசோழபுரம், மருதூர்,  நங்கவரம்  உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும்.  
கடும் நடவடிக்கை 
அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 22-ந் தேதி அன்று ஒரு நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மேலும் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளும் அன்று மூடப்படும். விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Next Story