மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் கைது


மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2022 11:44 PM IST (Updated: 15 Feb 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு:-

ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சுந்தரி. மோகன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுந்தரி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடைய மகள் கீர்த்தனா (வயது16) வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தம்பி ஹேராம் (12) இவரும் அதே பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறார். 
நேற்று முன்தினம் காலை கீர்த்தனாவும், அவரது தம்பி ஹேராம் ஆகிய இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு சாப்பாட்டுக்கு சென்ற கீர்த்தனா உரிய நேரத்தில் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் கீர்த்தனாவின் தம்பி ஹேராமை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஹேராம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கீர்த்தனா பள்ளி சீருடையுடன் தூக்கில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேராம் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று, தூக்கில் தொங்கிய கீர்த்தனாவை இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. 

ஆசிரியர் கைது

இதுகுறித்து மாணவி கீர்த்தனாவின் சித்தப்பா சண்முகம் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பள்ளியின் ஆங்கில ஆசிரியர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணேஷ் (31) என்பவர் படிப்பு தொடர்பாக மாணவி கீர்த்தனாவை திட்டியதும், இதனால் மனமுடைந்து கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவியை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் கணேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story