100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சிறுவர்கள் யோகா மூலம் விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சிறுவர்கள் யோகா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுவர்கள் யோகா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி தீப மலை ஆன்மிக மையத்தில் நடைபெற்றது. இதில் ஹனீஷ்குமார் (வயது 13) மற்றும் தர்ஷன் (6) ஆகியோர் ஒருவர் தோளின் மீது மற்றொருவர் ஏறி பத்மாசனத்தில் அமர்ந்து கையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக சிறுவர்களின் பெற்றோர் டாக்டர் ராஜா, ஹரிகோவிந்தன் மற்றும் யமுனா ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story